வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (09:31 IST)

பான், ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்க அவகாசம் - மத்திய நிதி அமைச்சகம்

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரை பான், ஆதார் இணைப்பிற்கான அவகாசம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கியில் கணக்கு வைத்திருப்போர் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. அனைத்து வாடிக்கையாளர்களும் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் பான், ஆதாரை இணைக்க அவகாசமும் அளித்து இருந்தது. மத்திய அரசின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
 
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் கடந்த 13-ந்தேதி பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.