செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (17:00 IST)

இந்தியாவில் கரை ஒதுங்கும் பாகிஸ்தான் படகுகள்: எல்லையில் பதற்றம்!

குஜராத் கடல்பகுதியில் பாகிஸ்தான் படகுகள் தொடர்ந்து ஒதுங்கி வருவதால் எல்லையில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஆளரவமற்ற படகுகள் கிடைத்ததால் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சுறுத்தல் நிலவி வருகிறது.

இந்நிலையில் குஜராத் கடல்பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த 5 படகுகள் தனியாக மிதந்து கொண்டிருந்திருக்கின்றன. அவற்றை மீட்டு வந்த எல்லை பாதுகாப்பு படையினர் படகு கிடைத்த பகுதிகளில் தீவிர ரோந்து நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கட்ச் பகுதியில் சில படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இதேபோல் படகுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.