வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (08:42 IST)

இன்றுடன் முடிவடையும் ப.சிதம்பரம் காவல்! அடுத்தது என்ன?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் சிபிஐ காவல் செப்டம்பர் 2 ஆம் தேதியுடன் அதாவது இன்றுடன் முடிகிறது. ப.சிதம்பரம் அவர்களின் சிபிஐ காவல் இன்று முடிவடையும் நிலையில் அவர் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார் 
 
 
இன்றைய விசாரணையின்போது ப.சிதம்பரம் அவர்களை மேலும் சில நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ கோரிக்கை வைக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த முறை ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க சிபிஐ கோரிக்கை விடுத்தபோதே நீதிபதி கடிந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மேலும் சில நாட்கள் சிபிஐ காவலில் இருப்பதை ப.சிதம்பரம் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்காததால் அவர் மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார்
 
 
எனவே இன்றைய விசாரணைக்கு பின் ப.சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அவர் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இன்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு கூடுதல் போலீஸ் காவலும் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது