1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (11:42 IST)

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு - ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு அளித்ததையடுத்து அவரை கைது செய்ய வரும் ஜூன் 5 தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது  ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடியை முதலீடு செய்வதற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் நிறுவனம் மறைமுகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதில் ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக சில ஆவணங்களை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. 
அதன் அடிப்படையில் சிதம்பரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருப்பதால் பா.சிதம்பரம் சார்பில் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் சிதம்பரம் மீது ஜூன் 5-ம் தேதி வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.