1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (21:25 IST)

டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு: நாளை ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் மற்றும் ஜாமீன் கிடைக்காத காரணத்தால் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 5ஆம் தேதி அவர் திகார் சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் செப்டம்பர் 19-ஆம் தேதி வரை உள்ளது.
 
 
இந்த நிலையில் தற்போது ப.சிதம்பரம் தரப்பில் இருந்து புதிய மனு ஒன்று டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திகார் சிறை காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள இந்த மனு மீதான விசாரணை நாளை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
மேலும் நாளை காலை இந்த மனு மீதான விசாரணையும், சிபிஐ காவலுக்கு திஎதிரான மனு மீதான விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம் அவர்களின் புதிய இந்த மனு மீதான விசாரணையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் திகார் சிறையில் இருந்து அவர் வெளியே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ப.சிதம்பரத்தின் இந்த மனுவிற்கு சிபிஐ தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் நாளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்