1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வியாழன், 14 ஜூலை 2022 (14:36 IST)

ஆலோசகர்களுக்கு பதில் ஜோதிடரை நியமித்து கொள்ளலாம்: நிர்மலாவுக்கு ப சிதம்பரம் ஆலோசனை

Chidambaram
ஆலோசகர்களுக்கு பதிலாக ஜோதிடரை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமனம் செய்து கொள்ளலாம் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் மீதும் தனது பொருளாதார ஆலோசகர்கள் மீதும் நம்பிக்கை இல்லாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தலைமை பொருளாதார ஜோதிடரை நியமனம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார் நாட்டின்
 
பணவீக்கம் 7.1 சதவீதமாகவும் வேலையின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளது என்றும் ஆனால் நிதியமைச்சர் வியாழன், செவ்வாய் கிரகங்களின் படங்களை பகிர்ந்துள்ளார் என்றும் இது எங்களுக்கு ஆச்சரியம் இல்லை என்றும் ஏனென்றால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது திறமையை விட தனது ஆலோசகரின் திறமையை விட ஜோதிடரை திறமையை நம்புகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்