1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 17 மார்ச் 2017 (04:54 IST)

ஒரே ஒரு பாஸ் போதும். எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். மம்தா அதிரடி

பயணிகள் பேருந்துகள், ரயில்கள், படகுகள், என பல்வேறு விதங்களில் பயணம் செய்யும்போது தனித்தனியாக டிக்கெட் எடுக்க வெண்டும் என்பதுதான் வழக்கம். ஆனால் கொல்கத்தாவில் இனி ஒரே ஒரு பாஸ் எடுத்து அதன் மூலம் அனைத்து போக்குவரத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இந்த முறை இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருக்கின்றது. தற்போது இது கொல்கத்தாவிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 


வெஸ்ட் பெங்கால் ட்ரான்ஸ்போர்ட் கார்டு' என்ற புதிய பாஸ் ஒன்றை கொல்கத்தா அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பாஸ்  மெட்ரோ ரயில்  சேவை தவிர மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து போக்குவரத்துகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொல்கத்தாவில் பேருந்துகள், டிராம் மற்றும் படகுசவாரிக்கு இனி ஒரே கார்டு போதுமானது. முதல்கட்டமாக இந்த கார்டு ஐந்து பேருந்து நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலும், 20 பேருந்து நிலையங்களில் இந்த கார்டு வழங்கப்படும் என்று மம்தா அரசு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.