வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (11:34 IST)

42 பயணிகளுடன் பேருந்தை கடத்திய போலி போலீஸ்காரகள். மைசூரில் பரபரப்பு

பெங்களூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்னி பஸ் ஒன்றை 42 பயணிகளுடன் 7 பேர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் கண்ணூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்றில் 10 பெண்கள் உள்பட 42 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்து மைசூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் மறித்தது.
 
தாங்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்றும், பேருந்தை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறிய அவர்கள் முதலில் பேருந்து ஓட்டுனரை கீழே இறங்க சொன்னார்கள். பின்னர் திடீரென அந்த 7 பேர்களில் ஒருவர் பேருந்தை ஓட்டி சென்றார். அப்போதுதான் பயணிகளுக்க்கு தாங்கள் கடத்தப்பட்டுள்ளோம் என்று தெரிந்துள்ளது.
 
இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் கொடுத்த புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட போலீசார் பேருந்தை மடக்கி நிறுத்தினர். பேருந்தை கடத்திய 7 பேர்களில் 3 பேர் தப்பியோடிவிட்டதாகவும், 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டு வருவதோடு, தப்பியோடிய மூவரை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.