புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 14 ஜூலை 2019 (08:01 IST)

ஹேமாமாலினியின் துடைப்பம் போஸ்: கலாய்த்த முன்னாள் முதல்வர்

தூய்மை பாரதம் திட்டத்திற்காக பிரதமர் மோடி உள்பட அமைச்சர்களும் எம்பிக்களும் அவ்வப்போது துடைப்பத்தை கையில் எடுத்து சுத்தம் செய்வது போன்ற போஸ்களை கொடுத்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று பாராளுமன்ற வளாகத்தை நடிகையும் மதுரா தொகுதி எம்பியுமான ஹேமாமாலினி சுத்தம் செய்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம். 
 
ஹேமாமாலினியின் இந்த தூய்மை இந்தியா நாடகத்தை  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா, தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார். இந்தியாவில் உள்ள மிக தூய்மையான பகுதிகளில் ஒன்று நாடாளுமன்றம். அதிலும் பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது அதிக தூய்மையாக காணப்படும். அவ்வாறு சுத்தமாக இருக்கும் பகுதியை ஹேமாமாலினி சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கலாயத்தார்.
 
நேற்று வெளியான ஹேமாமாலினியின் தூய்மை பாரதம் குறித்த வீடியோவை பார்த்து பல நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். தரைக்கு வலிக்காமல் சுத்தம் செய்ய ஹேமாமாலினியால் மட்டுமே முடியும் என்றும், எங்க தெருவுல குப்பை குன்றுபோல் குவிந்து கிடக்கிறது வந்து கிளீன் பண்ணிட்டு போகச்சொல்லுங்க என்றும், ஒரே நாடு ஒரே துடைப்பம் திட்டமோ!? என்றும், முதலில் நாடாளுமன்றத்தில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்றும் கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர்.