வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (17:53 IST)

முதுகு சொறிய ஜேசிபியா? இதெல்லாம் ஓவரு தாத்தா! – வைரலான வீடியோ!

முதியவர் ஒருவர் ஜேசிபியில் முதுகு சொறிவது போல வெளியான வீடியோ வைரலாகி உள்ள நிலையில் பலர் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் குறும்பு வீடியோக்கள் வெளியிட பல்வேறு சமூக ஊடகங்கள் வளர்ந்து விட்ட நிலையில், பார்வையாளர்களை ஈர்க்கவும், அதிக லைக்குகள் வாங்கவும் பலர் பலவிதமான நூதனமான வீடியோக்களை வெளியிடுகின்றனர். அதே சமயம் பலர் அதிக பார்வையாளர்களை ஈர்க்க ஆபத்தான செயல்களையும் செய்வது அதிர்ச்சியை அளிக்கிறது.

தற்போது சமூக வலைதளங்களில் முதியவர் ஒருவர் தனது முதுகை ஜேசிபியின் தோண்டும் பகுதியை வைத்து சொறிவதாக அந்த வீடியோவில் உள்ளது. பிறகு ஜேசிபி ஆபரேட்டர் எந்திரத்தை ஆன் செய்து தோண்டும் பகுதியை கொண்டு நிஜமாகவே முதியவரின் முதுகில் சொறிகிறார். இது பார்க்க நகைச்சுவையாக இருந்தாலும் ஆபத்தானது என்று பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.