வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (19:06 IST)

வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ! இந்தியாவில் புதிய சாதனை

இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தால் இருப்பவர்களைக் காண்பது அரிது. அந்தளவுக்கு காலையில் எழுந்ததும் வாட்ஸ் ஆப்பில் விழித்து, இரவு தூங்கும்போது வாட்ஸ் ஆப்பை பார்த்து தூங்குபவர்களே அதிகம்.
இந்நிலையில் இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்ததாக வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த 2107 ஆம் ஆண்டு வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்ததாக அறிவிக்கபட்டது. இப்போது அதன் பயனாளர்களின் எண்ணிக்கை 40 கோடியை கடந்துள்ளது.
 
மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துவிடும் என்று நிதிஅயொக் செயல் அதிகாரி அமிதாப் அதிகாரி கண்ட் தெரிவித்துள்ளார்.தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக யுள்ள நிலையில்  2022 ஆம்  ஆண்டில் இந்த எண்ணிக்கை 80 கோடியாக உயரும் என்ற தகவல்கள் வெளியாகின்றன.