ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (16:01 IST)

வீட்டை காலி செய்யுங்க....அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ் !

காங்கிரஸ் கட்சியின் பிரபல மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். இவரது மகன் கார்த்தி சிதம்பரம். இவர் நிதி முறை கேட்டில்  ஈடுபட்டதாக இவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீட்டை, 10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது. இவழக்கு தொடர்பாக அவரது பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லில் உள்ள ஜோர் பாக் என்ற பெயரிலான அவரது வீடு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் வீட்டை காலிசெய்து ஒப்படைக்க வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.