1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (07:15 IST)

வங்கியில் கணக்கு தொடங்கவும் குடியுரிமை சான்று அவசியமா? அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசு குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை சமீபத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன
 
இந்த சட்டத்தில் என்ன கூறப்பட்டுள்ளது? இந்த சட்டத்தால் யார் யாருக்கு பாதிப்பு? என்பது குறித்த புரிதல் இல்லாமல் அரசியல் தலைவர்களின் ஆவேசமான பேச்சை கேட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராடி வருவதாக பாஜக தரப்பில் இருந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது
 
இந்தியாவிலுள்ள குடிமக்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும், வங்கதேசம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு மட்டுமே இந்த குடியுரிமை சட்டம் பொருந்தும் என்று பாஜகவினர் விளக்கம் அளித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் வங்கியில் கணக்கு தொடங்க குடியுரிமை சான்றிதழ் அவசியம் என்றும் மத அடையாளம் குறித்த சான்றிதழ் தேவை என்று ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் அவர்கள் ’வங்கி கணக்கு தொடங்கும் போது இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும், அதேபோல் மத அடையாளம் குறித்த விவரம் விண்ணப்பத்தில் இருந்தாலும் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்
 
இந்திய ரிசர்வ் வங்கி இது குறித்து முக்கிய உத்தரவை வெளியிட்டு இருப்பதாகவும் பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்தே இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக கருதப்படுகிறது