1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:12 IST)

ஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்த திட்டமா? மத்திய அரசு தகவல்..!

ஆதார் தகவலை மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பயன்படுத்த திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிலளித்தார். 
 
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையிட்ட தரவுகளின் படி நடந்த பிப்ரவரி மாதம் 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 கோடி பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன என்றும் தெரிவித்தார். 
 
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவலை பயன்படுத்த திட்டம் ஏதும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையால் அலுவலகமும் உறுதி செய்துள்ளது என்றும் அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
Edited by Siva