1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:07 IST)

முதுகலை நீட் கவுன்சிலிங்கிற்கு தடையில்லை- உச்ச நீதிமன்றம் உத்தரவு

NEET
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்தது,

இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு  கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடந்தது. இதற்கான முடிவுகள் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியானது.

இந்த   நிலையில், முது நிலை நீட் மருத்துவப்படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இந்த நிலையில்,  மது நிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை இன்னும் வெளியிடாத தேசியத் தேர்வுவாரியத்தின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்ய மனுவை பட்டியிலிடும்படி மனுதாரார் கேட்டிருந்தார். இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு ‘’ நீட்  கவுன்சிலிங்கிற்கு தடையில்லை என்றும் நீட் கடவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்கும்’’ என  உத்தரவிட்டுள்ளது.