வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (10:06 IST)

உங்கள் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை: ராகுலுக்கு பதிலடி கொடுத்த நிதின்கட்காரி

பாஜக அமைச்சர் நிதின்கட்காரி கடந்த சில நாட்களாக சேம் சைட் கோல் போடும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும், வீட்டை நிர்வகிக்க தெரியாத ஒருவர் நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும் என்று அவர் கூறியது ஒரு முக்கிய தலைவரை விமர்சனம் செய்ததே என்றும் செய்திகள் பரவின

நிதின்கட்காரியின் இந்த கருத்தை பாராட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 'பாஜகவில் சிறிதளவு தைரியம் கொண்ட ஒரே நபர், நிதின் கட்கரி என்றும், ரபேல் விவகாரம், விவசாயிகளின் துயரம் மற்றும் சிபிஐ, ஆர்பிஐ, வேலைவாய்ப்பு குறித்தும் நிதின்கட்காரி பேச வேண்டும்’ என்றும் தனது டுவிட்டரில் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிதின்கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில், '’ராகுல்காந்தி அவர்களே, உங்கள் சான்றிதழ் எனக்கு தேவையில்லை. ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பத்திரிகைகளில் திரித்து வெளியான செய்தியை ஆதாரமாக கொண்டு எங்கள் அரசை தாக்குவது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் மற்றவர்களின் தோளை ஆதரவாக பிடித்துக்கொண்டு பேசுகின்றீர்கள். ஆனால் அதுதான் எங்கள் பிரதமர் மோடி மற்றும் எங்கள் அரசின் பலம்’’ என்று கூறியுள்ளார்.