ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (22:30 IST)

நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?

நித்யானாந்தா மீது பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டதாக கன்னட சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கர்நாடகாவில், ராம்நகர் மாவட்டம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வரும் நித்யானந்தா, பெண் பக்தர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இதுகுறித்து ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை நித்தியானந்தாவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து பாஸ்போர்ட் அலுவலகமும் அதனை ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் பாலியல் வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாகவும், நேபாளம் வரை சாலை மார்க்கமாகவும் அதன்பின் பிரிட்டன் ஆதிக்கத்திலுள்ள, 'கெய்மன்' தீவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதற்கு நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் விரைவில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.