வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (13:01 IST)

பெட்ரோல் வேண்டாம் ஆல்கஹால் போதும் –மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகமாகி வருவதால் அதற்கு மாற்றாக எத்தனால் எனும் ஆல்கஹாலைப் பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு யோசித்து வருவதாக அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

உத்திர பிரதேசத்தில் அமையவுள்ள பாஸ்தி வளையச்சாலையின் அடிக்கல்நாட்டு விழாவுக்காக வந்திருந்த சாலைப் போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிதின் கட்கரியிடம் பெட்ரோல் விலை குறித்து கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த நிதின் கட்கரி ’மத்திய அரசு எத்தனால் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. எத்தனாலை நாம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மாற்றாக உபயோகிக்கலாம். விரைவில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார், பஸ் போன்றவற்றை நாம் விரைவில் எத்தனால் மூலம் இயக்கலாம்.’ எனக் கூறினார்.

மேலும் எத்தனால் உற்பத்தி குறித்துக் கூறிய அவர் ‘சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை உற்பத்தியின் போது உதிரிப் பொருளாக எத்தனால் கிடைக்கிறது. மேலும் நாம் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கும் போது கரும்பு மற்றும் சோளம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் நாடு எரிபொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நிலையை நோக்கி நகரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

எத்தனால் என்பது ஒருவகை ஆல்கஹால் ஆகும். பல்வேறு பொருட்களின் உற்பத்தியின் போது அவை உதிரிப் பொருளாகக் கிடைக்கின்றன.