ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (08:50 IST)

நிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு தூக்கு – ஹேங்க்மேன் மற்றும் கயிறு கேட்ட திஹார் ஜெயில் !

நிர்பயா கொலைவழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற திஹார் சிறைத்துறை நிர்வாகம் தூக்குக் கயிறு மற்றும் ஹேங்க்மேன்களைக் கேட்டுள்ளது.

2012இல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான  ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மற்ற நால்வருக்குமான தூக்குதண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திஹார் ஜெயிலில் தூக்குபோடுவதற்கு ஹேங்க் மேன் இல்லாததால் இரு ஹேங்க்மேன்களை கேட்டு நிர்வாகம் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக இரு ஹேங்க்மேன்களை அனுப்ப தயாராக வைத்துள்ளது அரசு. மேலும் தூக்குமாட்ட கயிறுகளை புதிதாக தயாரிக்கும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.