இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்- மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில்,
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது . தற்பொதுவரை இந்தியாவில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி., இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் எனவும், அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், 100 % தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.