1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (07:57 IST)

கேரள சட்டமன்ற கொறடா ஆகிறார் சைலஜா: பினரயி விஜயன் அதிரடி முடிவு!

கேரள சட்டமன்ற கொறடா ஆகிறார் சைலஜா: பினரயி விஜயன் அதிரடி முடிவு!
கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் சைலஜாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர் 
 
இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தற்போது சைலஜாவுக்கு கொறடா பதவியை கேரள முதல்வர் அளித்துள்ளார். சற்று முன் வெளியான தகவலின்படி கேரள மாநில சட்டமன்ற கொறடாவாக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அமைச்சர் பதவிக்கு பதிலாக அவருக்கு சட்டமன்ற கொரடா பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து கூறிய சைலஜா அமைச்சர் பதவிக்கான தகுதி உள்ள திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்றும் இந்த புதிய அரசு நிச்சயம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சைலஜா கூறியுள்ளார்