தாலி கட்டிய 15 நிமிடத்தில் கணவரைவிட்டு குழந்தையுடன் ஓடிய மனைவி!!
ராஜஸ்தானில் திருமணமான 15 நிமிடத்தில் கணவரைவிட்டு குழந்தைக்காக ஓடிய மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஜ்ஜன் சிங் என்பவருக்கு பல ஆண்டுகளாக வரன் தேடியும் எந்த பெண்ணும் அமையவில்லை. இதனால், அவர் பெரும் விரக்தியில் இருந்துள்ளார்.
இதனை பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதிக்க நினைத்து அவரது சுற்றத்தார், சஜ்ஜனிடம் அனிதா என்னும் பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். அனிதாவும் அவருக்கு நல்ல பெண் தேடி தருவதாக கூறி, காஜல் என்னும் பெண்ணை அறிமுகம் செய்து, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் செய்துவைத்துள்ளார்.
இதற்காக அனிதா மற்ரும் அவரது கும்பல் சஜ்ஜனிடம் இருந்து ரூ.2,50,000 பெற்றுள்ளனர். சொன்னபடி குறிப்பிட்ட தேதியில் சஜ்ஜனுக்கும் காஜலுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், அதன் பின்னர்தான் சஜ்ஜனுக்கு பெரிய ஆப்பு இருந்துள்ளது.
திருமணம் முடிந்தவுடன் அனிதா மற்றும் அவரது கும்பல் சஜ்ஜன் - காஜல் தம்பதியினரை தனியாக விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து சஜ்ஜன் புதுமனைவியுடன் தனது ஊருக்கு சென்றுள்ளார். அப்போது அவரது புதுமனைவி இவர் என்னை கடத்தி செல்வதாக கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து விரைந்த போலீஸார் மெற்கொண்ட விசாரணையில், இவை அனைத்தும் நாடகம் என்ரும் 10 நிமிடம் திருமண பெண் போல் நடித்தால் ரூ.10,000 தந்ததால் இவ்வாறு நடித்ததாக காஜல் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையுள்ளதாக கூறி போலீஸிடம் கெஞ்சி அங்கிருந்து சென்றுள்ளார்.
போலீஸார் தற்போது சஜ்ஜனை ஏமாற்றி பணம் பறித்த அனிதா மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.