திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (08:05 IST)

நீரவ் மோடி இந்தியா திரும்பினால் தற்கொலை செய்து கொள்வாரா?

Neerav
நீரவ் மோடி இந்தியா திரும்பினால் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் லண்டன் ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்ற நீரவ் மோடியை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர சிபிஐ தீவிர முயற்சி செய்து வருகிறது 
 
இந்த நிலையில் லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வருவது தொடர்பான வழக்கு நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த வழக்கின் போது நீரவ்மோடியின் வழக்கறிஞர் நீரவ் மோடி மன அழுத்தத்துடன் இருப்பதால் அவர் இந்தியா திரும்பினால் அவரது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் அவர் இந்தியா திருப்பி அனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்
 
இந்த நிலையில் நீதிபதிகள் குழு நீரவ்மோடியை இந்தியாவுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ளதாக கூறப்படுகிறது
 
Edited by Siva