வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2022 (23:19 IST)

நாஜி வதை முகாம்: 10,500 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மூதாட்டிக்கு தண்டனை

நாஜி வதை முகாமில் 10,500 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 97 வயது மூதாட்டி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

ஜெர்மன் நாட்டில் ஹிட்லர் சர்வாதிகாரியாக இருந்தபோது,  நாஜி வதை முகாம் ஏற்படுத்தி யூதர்கள் உள்ளிட்ட  மக்களை கொன்றார்.

இதில்,  1943- ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையில் சுமார் 65,000 பேர் பட்டினியாலும் நோயினாலும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், நாஜி வதை முகாமின் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்சனர் என்பவர் 11,412 பேரை கொல்ல உதவியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் இறுதி விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றம் நடந்தபோது அவருக்கு 18 வயது என்பதால் மைனர் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அறையைச் சுத்தம் செய்ய சொன்ன தாயை கத்தியால் குத்திக் கொன்ற மகனை போலீஸார் கைது செய்துள்ளனர்