1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (14:36 IST)

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், ஏற்கெனவே அறிவித்தது போல் வரும் 29 தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தும் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.


பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள் ஜூலை 12,13 தேதிகளில், நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு, வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பை கைவிட்டு, பேச்சு வார்தை நடத்தி தீர்வுகான கூறியது.

இந்நிலையில், டெல்லியில், வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம், மத்திய தொழிலாளர் நல ஆணையரிடம், நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வரும் 29 தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைப்பெறும் என்று வங்கி ஊழியர் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.