முத்தலாக் மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (21:42 IST)
இன்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்
இஸ்லாமிய பெண்களின் திருமண உரிமையை பாதுகாக்க கொண்டுவரப்பட்டதே முத்தலாக் மசோதா ஆகும்

ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி மணமுறிவு தருவது தண்டனைக்குரிய குற்றம்

எழுத்து மூலமும் மின்னணு முறையில் வேறு எந்த வகையிலும் முத்தலாக் கூறி மனம் முறிவுபெறுதல் குற்றம்
குற்றம் இழைத்தவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம்

பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் ஜாமீன் தரும் முடிவை நீதிபதி எடுக்கலாம்

பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது இரத்த உறவுகள் மட்டுமே புகார் அளிக்க முடியும்
வழக்கின் போது தம்பதிகளுக்குள் சமரசம் ஏற்பட்டால் மீண்டும் சேர்ந்து வாழ முத்தலாக் மசோதா வழிவகை செய்கிறது

குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை பெண்ணை மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறி உரிமை கோரலாம்

இவை அனைத்தும் மசோதாவின் முக்கிய அம்சங்கள் ஆகும்


இதில் மேலும் படிக்கவும் :