வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (08:14 IST)

பட்ஜெட்டால் ஒரே நாளில் ரூ.3.6 லட்சம் கோடி நஷ்டம்: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமையாக இருந்தபோதிலும் பட்ஜெட்டை முன்னிட்டு பங்குச்சந்தை இயங்கியது.
 
பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கொண்டிருந்தபோது மும்பை பங்கு சந்தை கிடுகிடுவென சரிந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் பங்கு சந்தை சரிவால் ரூ.3.6 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத பெரும் சரிவால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
பொதுவாக பட்ஜெட்டின் போது பங்குச்சந்தை உயரும் என்பதால் முதலீட்டாளர்கள் பட்ஜெட் தினத்தன்று புதிய பங்குகளை வாங்கி விற்பதில் ஆர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் நேற்று பங்குச்சந்தை ஆரம்பித்த காலை 9 மணியில் இருந்தே பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தது முதலீட்டாள்ரகளை அதிர்ச்சி அடைய செய்தது.
 
ஆனால் அதே நேரத்தில் நேற்று பட்ஜெட் காரணமாக தங்கத்தில் விலை உயர்ந்தது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,376-க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது