வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 30 டிசம்பர் 2021 (22:31 IST)

மும்பையில் இன்று ஒருநாளில் மட்டும் 190 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

மும்பையில் இன்று ஒரு நாளில் மட்டும் 190 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த மாதம் இந்தியாவில் ஒமிக்ரான் பரவத் தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது தற்போது இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது 
 
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் கட்டுக்கடங்காத வகையில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் மும்பையில் மட்டும் 190 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது