வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (09:09 IST)

மும்பை அம்பேத்கர் இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பெரும் பரபரப்பு

மும்பை அம்பேத்கர் இல்லம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
மும்பையில் உள்ள சட்ட மேதை அம்பேத்கார் இல்லத்தில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பையில் உள்ள தாதர் என்ற பகுதியில் அம்பேத்கார் வசித்த வீடு அவரது நினைவு இல்லமாக உள்ளது. இங்கே கீழ்தளத்தில் அருங்காட்சியகம் உள்ளது என்பதும் இந்த அருங்காட்சியகத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த அருங்காட்சியகத்தில் அம்பேத்கர் பயன்படுத்திய பொருள்கள், அவர்கள் எழுதிய நூல்கள் ஆகியவை பார்வையாளர்களுக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அம்பேத்கார் இல்லத்தில் நேற்றிரவு நுழைந்த மர்ம நபர்கள் அந்த வீட்டின் முன்பகுதியை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது 
 
மும்பை அம்பேத்கர் இல்லம் சேதப்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய மகாராஷ்டிர மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது