வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:07 IST)

அலிபாபா, அமேசானை உதைத்து தள்ளிய ரிலையன்ஸ்!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
ஆம், ரிலையன்ஸ் எண்ணை சுத்திகரிப்பு ஆலை, ரிலையன்ஸ் கியாஸ் ஆலை, ரிலையன்ஸ் ஜியோ என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் அம்பானியின் சொத்து மத்து வாயை பிளக்க வைத்துள்ளது.  
 
நடப்பு ஆண்டில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 17 பில்லியன் டாலர்கள் அளவுக்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 40% அதிகரித்தது, 
 
இதே ஆண்டில், அலிபாபா நிறுவனர் ஜேக்மாவின் சொத்து மதிப்பு 11.3 பில்லியன் டாலர்கள் அளவுக்கும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு 13.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கும் உயர்ந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.