திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2016 (08:25 IST)

மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்

மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கர்ப்பிணி பெண் வயிற்றில் மாமியார் ஒருவர் ஆசிட் வீசி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிரிஜா (27) என்ற பெண்ணுக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இவர் மீண்டும் கர்ப்பமானார். இவரது கருவில் இருப்பது பெண் குழந்தை என்று ஜோதிடர் கூறியதாகக் கூறப்படுகிறது.
 
அதை நம்பிய அந்த பெண்ணின் மாமியார், அவரது நாத்தனார்கள் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ய முடிவு செய்தனர். ஆத்திரம் அடைந்த கிரிஜாவின் மாமியார் மற்றும் கிரிஜாவின் கணவரின் சகோதரி ஆகிய இருவரும் சேர்ந்து கிரிஜாவின் வயிற்றின் மேல் ஆசிட்டை வீசியுள்ளனர். கிரிஜாவின் கதறல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
இது தொடர்பாக கிரிஜாவின் மாமியார் மற்றும் கணவரின் சகோதரி மேல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரது மாமியார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.