குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா: 3 ஆம் அலைக்கு என்ன நிலையோ?
கொரோனா இரண்டாவது அலையில் கர்நாடகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையில் கர்நாடகத்தில் மட்டும் 1 முதல் 9 வயது வரை உள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 9 முதல் 19 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சம் பேரை வைரஸ் தாக்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை வரும் என்றும் அதில் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.