1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2025 (07:16 IST)

எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு மாத ஓய்வூதியம்! - முதல்வர் அறிவிப்பு!

Odissa CM

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியால் சிறை சென்றவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

 

 

இந்திராகாந்தி பிரதமாரக இருந்தபோது 1975ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அவசர நிலை பிரகடனத்தால் ஏராளமான அரசியல் கட்சியினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். 1977ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்த இந்த எமெர்ஜென்சி காலமானது இந்திய வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய காலமாக கூறப்படுகிறது.

 

இந்த எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்றவர்களுக்கு உதவும் வகையில் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை தொடங்குவதாக பாஜக முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்த அறிவிப்பில் அவர் “அவசர நிலையின்போது சிறையில் அடைக்கப்பட்டு இன்னல்களை சந்தித்த அனைவருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் ஓய்வூதியமும், இலவச மருத்துவ சிகிச்சை வசதியும் வழங்கப்படும். இந்த திட்டம் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 1.1.2025 அன்றைக்கு தேதியில் உயிருடன் உள்ள அனைத்து மிசாவில் கைதானவர்களுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும்” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K