திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 11 மே 2017 (10:28 IST)

தமிழில் டிவிட் செய்த மோடி ; காய்ச்சி எடுத்த நெட்டிசன்கள்

சுத்த தமிழில் டிவிட் செய்த பிரதமர் மோடியை நெட்டிசன்கள், சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.


 

 
கௌதம புத்தரை சிறப்பிக்கும் புத்த பூர்ணிமா மற்றும் வேசக் என்கிற விழா  ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு வருகிற 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை ஐ.நா.சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடக்கிறது. அதில் பிரதம் மோடி பங்கேற்கிறார்.
 
எனவே இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் “இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். இதன் போது வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இணைந்து கொள்வேன்” என அவர் தூய தமிழில் டிவிட் செய்திருக்கிறார்.
 
இதைக் கண்ட நெட்டிசன்கள், இதுதான் வாய்ப்பு என அவரை காய்ச்சி எடுத்து விட்டனர். 







 




 








 

இதில் சிலர் அவரை பாராட்டியும், வாழ்த்தியும் டிவிட் செய்துள்ளனர்.