1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 9 பிப்ரவரி 2023 (16:27 IST)

நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும்: மோடி

modi
நீங்கள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும் சேற்றில் தான் தாமரை மலரும் என எதிர்க்கட்சிகளை நோக்கி பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும் சேற்றில் தான் தாமரை மலரும் என்பதை மறந்து விட வேண்டாம். 
 
பாஜக அரசு செயல்படக்கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள். மேலும் பாராளுமன்றத்தில் நடக்கும் விஷயங்களை நாடு மிகவும் ஆர்வத்தோடு உற்று நோக்குகிறது, துரதிஷ்டவசமாக இந்த அவையில் சிலருடைய குரல் இந்த நாட்டிற்கும் இந்த அவைக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர்களை அமைதி காக்கும்படி தொடர்ந்து சபாநாயகர் கூறினார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva