1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (08:12 IST)

பாத பூஜை செய்யும் பாரத பிரதமர்: தேர்தல் ஸ்டண்டா?

தேர்தல் வந்துவிட்டாலே அரசியல்வாதிகள் குணங்கள் டோட்டலாகவே மாறிவிடும். நான்கு ஆண்டுகள் யாரும் நெருங்க முடியாத பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் கடைசி ஒருவருடத்தில் மட்டும் மக்களோடு மக்களாக பழகிவருவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்
 
நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தோளில் மாற்றுத்திறனாளி ஒருவர் கைபோட்டார். அதை கண்டு சிறிதும் கோபப்படாமல் சிரித்து கொண்டே முதல்வர் போஸ் கொடுத்த நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி துப்புரவு தொழிலாளிகளுக்கு பாதபூஜை செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
 
பிரதமர் நரேந்திரமோடி நெற்று உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழை விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்தார். திரிவேணி சங்கமத்த்தில் புனித நீராடிய பிரதமர் அந்த பகுதியில் துப்புரவு செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுடன் கலந்துரரயாடினார். அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி அவர்களில் ஐந்து பேர்களின் பாதங்களை கழுவி அவர்களை கவுரவப்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஈர்த்துள்ளதாக தெரிகிறது
 
ஒருசிலர் இதனை தேர்தல் கால ஸ்டண்ட் என்றும், மற்றும் சிலர் மோடி எப்போதும் துப்புரவு தொழிலாளர்களை கவுரப்படுத்துவார் என்றும் கூறி வருகின்றனர்.