திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2016 (16:44 IST)

பிரதமர் மோடி படத்துடன் கவர்ச்சி ஆடை : பரபரப்பை ஏற்படுத்திய ராக்கி சாவந்த்

இந்திய பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய கவர்ச்சி உடைய அணிந்து பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் பரபரப்பை கிளப்பியுள்ளார்.


 

 
பாலிவுட் படங்களில் கதாநாயகிகளே ரசிகர்களுக்கு தேவையான கவர்ச்சியை அள்ளி தெளிப்பதால், கவர்ச்சி நடிகைகளுக்கு அங்கு வேலை இல்லை. எனவே ராக்கி சாவந்த் அரசியல் பக்கம் சென்றார். அதிலும் தோல்வி.
 
அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, விருது வழங்கும் விழாக்கள் மற்றும் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். 
 
இவர், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்கர்கள் இந்திய கூட்டமைப்பு மூலம் நடைபற்ற நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும் போது அணிந்திருந்த ஆடை தற்போது சர்ச்சைய ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஏனெனில் அந்த ஆடையின் முன்னும் பின்னும், ஏடாகூடாமான இடங்களில் மோடியின் படங்கள் இருக்கிறது.