1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 17 ஜூலை 2017 (20:02 IST)

ஜிஎஸ்டி-க்கு புது அர்த்தத்தை உருவாக்கிய மோடி!!

ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடி முழுவது ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி பற்றிய தகவல்கள் பல வந்தாலும் மக்களுக்கு ஜிஎஸ்டி-யின் முழு நோக்கமும் வழிமுறைகளும் புரியாமல்தான் உள்ளது.


 
 
இந்நிலையில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஜிஎஸ்டி அமலக்கத்திற்கு பின்னர் கூடும்  கூட்டத்தொடர் இதுவாகும். 
 
கூட்டத்தொடரில் பங்கேற்கச் செல்லும் முன் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, இந்த கூட்டத்தொடர் சுமூகமான நடைபெற வேண்டும்.
ஜிஎஸ்டி (Goods and Service Tax) என்பது வெற்றி பெற வேண்டும் என்றால் ஜிஎஸ்டி (Growing Stronger Together) அனைவரிடமும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.