செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (11:39 IST)

வாரணாசியில் போட்டியிடுகிறாரா ராகுல் காந்தி? மோடியுடன் நேருக்கு நேர் மோதல்?

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே தொகுதியில் போட்டியிட போவதாகவும் முதல் முறையாக ராகுல் காந்தி மற்றும் மோடி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக அரசியல் நாகரீகம் கருதி பிரதமர், முதல்வர் போட்டியிடும் தொகுதியில் எதிர்க்கட்சிகள் பெரிய தலைவர்களை போட்டியிட வைப்பதில்லை. ஆனால் இம்முறை மோடியை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் மோடியை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

இதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்தபோது வாரணாசி தொகுதியை ராகுல் காந்தி கேட்டு பெற்றுள்ளதாகவும், தானே அந்த தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறியதாகவும் தெரிகிறது. இந்த தகவல் மட்டும் உறுதி செய்யப்பட்டால் வாரணாசி தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran