தமிழ்நாட்டு லாரியில் கர்நாடகா கொடியை கட்டி பழிவாங்கிய கும்பல்..
கர்நாடகா மாநிலத்தில் தமிழ்நாட்டு லாரியை வழிமறித்த கும்பல், அந்த லாரியில் கர்நாடகா மாநில கொடியை கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிந்து தமிழகம் வழியாக சபரிமலைக்கு சென்றுக்கொண்டிருந்த வாகனத்தில் அம்மாநில கொடி கட்டப்பட்டிருந்ததாகவும் அதனை தமிழக போலீஸார் வலுக்கட்டாயமாக அகற்றியதாகவும் செய்தி வெளிவந்தது.
இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் வகையில், கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரியை மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அந்த லாரியில் கர்நாடகா மாநிலக் கொடியை கட்டியுள்ளனர். மேலும் அந்த லாரி டிரைவரை வலுக்கட்டாயமாக ஜெய் கன்னடா என்று கூறும்படி வற்புறுத்தியும் உள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.