1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (05:50 IST)

இஸ்லாம் மதத்திற்கு மாறிய இளம்பெண் மீண்டும் இந்து மதத்தில்! நடந்தது என்ன?

கேரளாவை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முஸ்லீம் மதத்திற்கு மாறியதாகவும், பின்னர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



 
 
அதிரா என்ற இளம்பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது தோழிகள், நண்பர்கள் தெரிவித்த இஸ்லாம் கருத்துக்களால் மனம் மாறியுள்ளார். அவர்கள் கொடுத்த இஸ்லாம் புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்தவுடன் மனம் மாறியது மட்டுமின்றி மதமும் மாறியுள்ளார். இதை அவர் தனது பெற்றோரிடம் கூறியபோது அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை விட்டும் வெளியேறியுள்ளார்.
 
பின்னர் ஒருசில மாதங்களில் அவர் பகுத்தறிவாதிகள் உரை, புத்தகங்கள் ஆகியவற்றை படித்தவுடன் மீண்டும் மனக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் தன்னுடைய பெற்றோரிடம் திரும்பி தற்போது இந்து மதத்தின் வழியில் வாழ்ந்து வருகிறார். ஒருசில மாதங்கள் மட்டுமே இஸ்லாம் மதத்தில் ஈடுபாடு கொண்டு பின்னர் அவர் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பியுள்ளது அந்த பகுதியை பரபரப்பி ஆழ்த்தியுள்ளது.