செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (21:28 IST)

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

nirmala sitharaman
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றி வருபவர் நிர்மலா சீதாராமன்.

இவர் சமீபத்தில் காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் பாதிப்பட்டதை அடுத்து  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தனிவார்டில்  சிகிச்சை பெற்று வந்த நிர்மலா சீதாராமன்(63) இன்று உடல் நிலை குணமடைந்ததை அடுத்து, வீடு திரும்பியுள்ளார்.