செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (17:31 IST)

மருத்துவர்கள் மருந்து சீட்டை கன்னடத்தில் எழுத வேண்டும்: கன்னட வளர்ச்சி ஆணையம் கோரிக்கை..!

doctors
கர்நாடக மாநிலத்தில் உள்ள மருத்துவர்கள் மருந்து சீட்டை கன்னடத்தில் எழுத வேண்டும் என்றும் அப்போதுதான் கன்னட மொழி மேலும் வளரும் என்றும் கன்னட வளர்ச்சி கழக அமைப்பு கோரிக்கை விடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழியை வளர்ப்பதற்கு கன்னட வளர்ச்சி ஆணையம் இருக்கும் நிலையில் இந்த ஆணையம் சமீபத்தில் கர்நாடகா மருத்துவத்துறை அமைச்சர் குண்டுராவ் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் அனைவரும் கன்னட மொழியில் மருந்து சீட்டை எழுதுவதை  கட்டாயமாக்க   வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கன்னட மொழி மீதான மதிப்பும் அன்பும் இதனால் அதிகரிக்கும் என்றும் அந்த அமைப்பை தெரிவித்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் குண்டுராவ் மருந்து சீட்டுகளை கன்னடத்தில் எழுதும் யோசனை நல்லது தான் என்றும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு கன்னடம் தெரியும் என்பதால் மருத்துவர்கள் அதனை பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால் இதனை கட்டாயமாக்க முடியாது என்றும் கன்னடம் தெரியாத மருத்துவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்றும் இந்த யோசனையை கட்டாயம் ஆக்குவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Edited by Siva