செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 16 மார்ச் 2024 (11:24 IST)

தெலங்கானாவில் போட்டியிடும் மாயாவதி கட்சி: சந்திரசேகர ராவ் ஒதுக்கிய தொகுதிகள் எத்தனை?

மாயாவதியின் பகுஜன் ஜமாஜ் கட்சி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட இருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகளை பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் ஒதுக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியாவின் பல தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அவர்களின் பி.ஆர்.எஸ் என்ற கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிஆர்.எஸ் அறிவித்துள்ளது. ஐதராபாத்  மற்றும் நாகர்கர்னூல் என இரண்டு தொகுதிகள் சந்திரசேகர் அவர்கள் மாயாவதி கட்சிக்கு ஒதுக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

மொத்தம் தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் 15 தொகுதிகளில் பிஆர்எஸ் போட்டியிடும் என்றும் இரண்டு தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் நாகர்கர்னூல்  தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் பிரவீன் குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Mahendran