வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:47 IST)

இந்தியாவின் பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்றனும் - ப. சிதம்பரம் ’டுவீட்’

நேற்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் பேசும் போது, பொருளாதாரத்துக்கும், நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை பைபிள், ராமாயணம், மகாபாரதம் எனவும் கருதக்கூடாது என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் , தனது டுவிட்டர் பதிவின் மூலம் பாஜக உறுப்பினர் நிஷிகாந்த்துக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளர்.
 
அதில், பொருளாதாரத்துக்கும்,' நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாஜக கூறியுள்ளது, இந்திய பொருளாதாரத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டுள்ளார்.