திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2023 (18:02 IST)

குடிபோதையில் எம்பி., சஞ்சய் ராவத்துக்கு கொலைமிரட்டல் விடுத்த நபர் வாக்குமூலம்

sanjay Raut
மராட்டியத்தில், சிவசேனாவின்( உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில்,  குடிபோதையில் கொலைமிரட்டல் விடுத்ததாக ஒரு நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து நடந்து வருகிறது.

இம்மா நிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார்.

இவருக்கு  பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது.

இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்தார். அதில்,டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவோம். பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது போல் நீயும் கொல்லப்படுவாய்…நடிகர் சல்மான் கானும் கொல்லப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து,  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.  இதன்படி, சந்தேகத்திற்குரிய ஒரு நபரை புனே போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் பெயர் ராகுல் தாலேக்கர்(23).  அவர் குடிபோதையில் மிரட்டல் விடுத்ததாகவும், அவருக்கும்,  பிஷ்னோய் கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

எனவே,’விராணை முழுமையாக நடத்திய பின் நடவடிக்கை எடுக்கப்படும் ‘என்று மராட்டிய மாநில துணைமுதல்வர் பட்னாவிஸ் கூறியுள்ளார்.