ஆற்றை கடக்க முயன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் – அதிர்ச்சி வீடியோ
Last Modified வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (14:56 IST)
மத்திய பிரதேசத்தில் ஆற்றை கடக்க முயன்ற ஒரு மனிதர் நீரில் அடித்து செல்லப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்கர் அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் ஒரு வாலிபர் ஆற்றைக்கடக்க முயற்சி செய்துள்ளார். நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலையாக நிற்க முடியாமல் திணறிய அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதை கரையிலிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அவரது சடலத்தை போலீஸார் மீட்டுள்ளனர்.