வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 9 மார்ச் 2020 (11:56 IST)

இந்த வயசுலயும் என்ன ஸ்டைல்: ரஜினியின் மேன் vs வைல்ட் எபிசோட் டீசர்!

டிஸ்கவரி சேனலின் வெளியாகவுள்ள ரஜினிகாந்தின் எபிசோட் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
டிஸ்கவரி சேனலின் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். பியர் க்ரில்ஸ் என்பவர் பல நாடுகளிலும் உள்ள காடுகளுக்குள் சென்று தனி ஆளாக அங்கு கிடைப்பவற்றை உண்டு வாழ்ந்து திரும்புவதுதான் அந்த நிகழ்ச்சியின் சாரம்சம்.
 
உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் பிரபலங்களுடன் காடுகளுக்கு செல்லும் நிகழ்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் பிரதமர் மோடிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
 
இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பந்திப்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. அன்று முதல் ரஜினி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்களிடையே ஆவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பப்படுவதாக டிஸ்கவரி சேனல் ஏற்கனவே அறிவித்தது. 
 
இதனைத்தொடர்ந்து இப்போது இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பியர் க்ரில்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக காணப்படுகிறார். 
 
இதோ அந்த வீடியோ...