நிர்வாணப் படங்களை எடுத்து முன் பின் தெரியாதவர்களுக்கு அனுப்பிய நபர்… போலிஸாரே அதிர்ச்சி!
கர்நாடகாவில் 200க்கும் மேற்பட்ட நம்பர்களுக்கு தன்னுடைய நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சித்ரதுர்கா எனும் பகுதியில் உள்ள சல்லகேரில் வசிக்கும் ராமகிருஷ்ணன் எனும் முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய நிர்வாணப் படங்களை செல்போனில் எடுத்து அதை முன் பின் தெரியாத நம்பர்களுக்கு (குத்துமதிப்பாக எண்களை டயல் செய்து) அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இவரது எண்ணில் இருந்து அது போல புகைப்படங்கள் சென்ற ஒரு பெண்ணின் சகோதரர் ஒருவர் புகாரளித்ததை அடுத்து போலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரின் செல்போனை எண்ணைக் கண்காணித்த போலிஸார் அவரை வீட்டில் வைத்தே கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது செல்போனில் இருந்து இதுபோல 200 பேருக்கு மேல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.