ஏபிசிடி எழுத தெரியாமல் அடி வாங்கும் நாய்; வைரல் வீடியோ
நாய் ஏபிசிடி எழுதவில்லை என ஒருவர் நாயை அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
ஒருநபர் தான் வளர்க்கும் நாயின் முன்னங்காலை பிடித்து ஏபிசிடி எழுத வைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த நாய் எந்த விருப்பமும் காட்டவில்லை. இதனால் அந்த நபர் நாயை அடிக்கிறார். இந்த வீடியோ கடந்த 25ஆம் தேதி யூடியூபில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மனித குரங்களுக்கு பழக்கப்படுத்தினால் அவைகள் எழுத படிக்க செய்யும். ஆனால் நாய் எப்படி எழுதும். அதுவும் ஏபிசிடி எழுத வேண்டுமென்றால் நாய் என்ன செய்ய முடியும். ஆனால் அந்த நபர் நாய் ஏபிசிடி எழுதவில்லை என அடிக்கிறார்.